பலதும் பத்தும்
பட்டப்பகலில் வழிப்பறி; துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த அதிர்ச்சி வீடியோ!

“அங்காடியா” என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.
இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள சந்தை தொகுதியில் முகக்கவசம் அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்தார்.