முகநூல்

மகளிர் தினச் செய்தி!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சாதனை பெண்மணிகள் நான்கு பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மருத்துவர் தன.குணசீலி ( மருத்துத்துறை), கந்தர்வகோட்டை பகுதியின் முதல் பெண் நாவலாசிரியர் ந. சுலோச்சனா சகாதேவன், தேர்தல் ஆணையத்தின் விருதை தமிழ்நாடு ஆளுநர் கையால் விருது பெற்ற அண்டனூர் கிராம நிர்வாக அலுவலர் சா. இளவரசி, கந்தர்வகோட்டை முழுநேர கிளை நூலகர் ஆ. வனிதா நால்வருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் திரு. மா. ரமேஷ் அவர்களும் தஞ்சாவூர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கௌரவத் தலைவர் மருத்துவர் மு. செல்லப்பன் அவர்களும் சாதனை பெண்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள். 

இந்நிகழ்வுக்கு கந்தர்வகோட்டை கிளைத் தலைவர் மஞ்சைதாசன் அவர்கள் தலைமை வகித்தார். கிளைச் செயலர் ஜீவாதாசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா, மாவட்டச் செயலர் பாலச்சந்திரன், நாவலாசிரியர் சோலச்சி,  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முத்துக்குமார், ரகமத்துல்லா,  தவச்செல்வம் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள். கிளை பொருளர் ஜெயபிரகாஷ் அவர்கள் நன்றி நல்கினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *