முச்சந்தி

மார்ச் 17 வரை தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கான கால எல்லை நேற்று 12 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவிருந்த போதும், ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை கருத்தில் கொண்டு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு 12:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபாலில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் போது ஏற்படக்கூடிய காலதாமதத்தை தவிர்க்கும் முகமாக இன்று 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலத்தினுள் பூரணப்படுத்திய தபால் வாக்கு விண்ணப்பங்களை தபாலில் அனுப்புவதை தவிர்த்து சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபை, மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச சபை, அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியற்றுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button