முச்சந்தி
கொடூரமாக பழிவாங்கப்படும் ‘அலவைட்’ மக்கள்!… சிரியாவில் சிறுபான்மையினர் மீது தொடரும் வன்முறை… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அசாத்தின் அலவைட் (Syrian Alawites) சிறுபான்மை மக்களும் லதாகியா மற்றும் டார்டஸ் இடங்களில் பாதுகாப்புப் படைகளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
அலவைட் (Syrian Alawites) மக்களின் எண்ணிக்கை சுமார் 2.1 மில்லியன் சிரியாவில் உள்ளனர்.
இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவான அலவைட்டுகள், சிரியாவின் மக்கள்தொகையில் சுமார் 12% உள்ளனர்.
அலவைட்டுகள் ஒரு தனித்துவமான மதக் குழுமமாவர். அலவைட்டுகள் சுன்னி அல்லது ஷியா இஸ்லாத்தின் ஒரு பிரிவாக அல்லாமல், ஒரு தனி மதக் குழுவாகக் கருதப்படுகிறார்கள்.
அலவைட் மீது தாக்குதல்:
சிரியாவில் அசாத் ஆட்சி வீழ்ந்ததில் இருந்து, குறிப்பாக ஹோம்ஸ், லதாகியாவில் தங்கள் சமூகம் கொடூர வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக அலவைட் மக்கள் கூறுகின்றனர்.
புதிய ஆட்சியாளர்களான அல்-ஷரா சிரியாவை இன மத பேதமின்றி ஆட்சி நடத்துவதாக உறுதியளித்துள்ள நிலையில், குர்துகள், கிறிஸ்தவர்கள் ட்ரூஸ் போன்ற பிற சிறுபான்மை குழுக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அசாத்தின் ஆட்சியின் கீழ், அலவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தனர். சமீபத்திய வாரங்களில் நாட்டின் புதிய பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அலவைட் விசுவாசிகள் மீது புதிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
யார் இந்த அலவைட் ?
அலவைட் (Syrian Alawites) மக்களின் எண்ணிக்கை சுமார் 2.1 மில்லியன் சிரியாவில் உள்ளனர். அவர்களின் மூதாதையர்கள் வடமேற்கு சிரியாவின் கடலோரப் பகுதியில் உள்ள விவசாய நுசைரி மலைத் தொடரில் இருந்து வெளியேறி வந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவான அலவைட்டுகள், சிரியாவின் மக்கள்தொகையில் சுமார் 12% உள்ளனர். அலவைட்டுகள் ஒரு தனித்துவமான மதக் குழுமமாவர்.
அலவைட்டுகள் சுன்னி அல்லது ஷியா இஸ்லாத்தின் ஒரு பிரிவாக அல்லாமல், ஒரு தனி மதக் குழுவாகக் கருதப்படுகிறார்கள்.
அலவைட்டுகளின் நம்பிக்கைகள் சுனி மற்றும் ஷியா இஸ்லாம் இரண்டிலிருந்தும் கணிசமாக வேறுபடுகின்றன. இதில் தெய்வீக நபிகள் நாயகம் மற்றும் அலியின் பங்கு பற்றிய அவர்களின் புரிதல் அடங்கும்.
அவர்களில் பெரும்பான்மையானோர் ஹோம்ஸ் மற்றும் ஹமாவின் உள்நாட்டு சமவெளிகளில் கணிசமான அலவைட் இன சமூகங்கள் வாழ்ந்து உள்ளனர் என கூறப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டு வரை அலவைட் அவர்களின் ஒன்பதாம் நூற்றாண்டின் நிறுவனர் முஹம்மது இபின் நுசைருக்குப் பிறகு பொதுவாக நுசைரிஸ் என அழைக்கப்பட்டார்கள்.
அலி மீதான பக்தியின் மூலம் அவர்கள் இம்மத பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்க அலவைட் இந்த பெயரை ஓரளவு ஏற்றுக்கொண்டார்கள்.
சிரியப் படைகள் – அசாத் சார்பு போராளிகள் மோதல்:
அண்மையில் சிரியாவில் பாதுகாப்புப் படையினர், நாட்டின் கடலோரப் பகுதியில் பதவி நீக்கம்
செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு விசுவாசமான ஆயுததாரிகளுடன் சண்டையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு எதிர்க்கட்சி போராளிகள் ஆட்சியைக் கவிழ்த்ததில் இருந்து மிகக் கொடூரமான வன்முறையில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு விசுவாசமான ஆயுததாரிகளுடன் சண்டையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு எதிர்க்கட்சி போராளிகள் ஆட்சியைக் கவிழ்த்ததில் இருந்து மிகக் கொடூரமான வன்முறையில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.சிரியாவின் அலவைட் மக்களின் கோட்டையான லதாகியா மற்றும் டார்டஸ் இடங்களில் பாதுகாப்புப் படைகளைத் தாக்கியதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை.
ஆனால் மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பு சிரிய கண்காணிப்பு (SOHR) இரண்டு நாள் சண்டையில் 580 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவதாக கூறியுள்ளது.
இதேவேளை பெய்ரூட்டை தளமாகக் கொண்ட அல் மயாதீன் டிவி, பெண்கள் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பின்னர் முக்தாரியாவில் 30 க்கும் மேற்பட்ட ஆண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
அமைதிக்கு அச்சுறுத்தல்:
லதாகியாவின் காவல்துறைத் தலைவர் தற்போது இந்த நகரம் பாதுகாக்கப்பட்டதாகவும், இராணுவம் மற்றும் பாதுகாப்பு தளங்கள் மீதான முற்றுகை நீக்கப்பட்டதாகவும் கூறினார். இதற்கிடையில் மற்றய இடங்களில் இன்னமும் மோதல்கள் தொடர்கின்றன.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு தற்போதய சிரிய நிர்வாகம் போராடி வருகிறது. இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவின் கட்டுப்பாட்டை நீக்க ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கவை வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் முன்னைய அசாத் ஆதரவு மக்கள், மாஸ்கோவில் இருந்து பாதுகாப்பு கேட்டு சிரியாவில் உள்ள ஜப்லே நகருக்கு அருகில் உள்ள முக்கிய ரஷ்ய விமான தளத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிரியாவில் ரஷ்ய தலையிடு:
2015 இல் சிரிய போரில் ரஷ்யா நேரடியாக தலையிட்டது. அசாத் அரசு பக்கம் ரஷ்யா சாய்ந்தது. இருப்பினும் ரஷ்யா அவரது வீழ்ச்சிக்குப் பிறகு புதிய அதிகாரிகளுடன் தொடர்புகளை மீண்டும் திறந்து கொண்டது.
2024 டிசம்பரில் சிரியாவை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் அல்-அசாத் தற்போது மாஸ்கோவில் வசிக்கிறார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, சிரியா நிலைமைகளை கவனித்து வருவதாக கூறியுள்ளார்.
தற்போது செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரப்பூர்வ சிரிய தலைவர்கள் இந்த இரத்தக்களரிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னைய அல்-அசாத்தின் நீண்டகால ஆதரவாளரான ஈரான் அரசு, சிரியாவில் வன்முறை பிராந்திய ஸ்திரமின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்து உள்ளது.
சிரியாவில் பாதுகாப்பின்மை, வன்முறை, அப்பாவி சிரியர்களைக் கொல்வது மற்றும் தீங்கு விளைவிப்பதை ஈரான் கடுமையாக எதிர்க்கிறது. மேலும் இது பிராந்திய ஸ்திரமின்மைக்கு ஒரு ஊக்கியாகப் பார்க்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
தூக்கிலிடப்பட்ட அலவைட்கள் :
போர் கண்காணிப்பு குழுவின் படி சிரிய பாதுகாப்புப் படையினர் அலாவைட் மக்களை தூக்கிலிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. சிரிய பாதுகாப்புப் படைகள் லதாகியாவின் கடலோர மாகாணத்தில் அலாவைட் சிறுபான்மையினரைச் சேர்ந்த பலரை தூக்கிலிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு (SOHR) இப்பிராந்தியத்தில் கொடூர களத்தண்டனைகளில் 582 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது.
கடந்த ஆண்டு டிசம்பரில் அசாத்தை பதவியில் இருந்து அகற்றிய சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள், முன்னாள் அதிபரின் சொந்த நகரமான கர்தாஹாவில் தற்போது ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு வருவதாகக் கூறினர்.
இதன் காரணமாக அரசாங்கப் படைகளுக்கும், அசாத்துக்கு விசுவாசமான போராளிகளுக்கும் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து, 570 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஹோம்ஸ், லதாகியா மற்றும் டார்டஸ் நகரங்களில் தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு சண்டை மேலும் வெடித்துள்ளது.
மேலும் இந்த மாகாணத்திற்கான அனைத்து அதிகாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக லதாகியாவின் ஆளுநர் கூறியுள்ளார்.
சிரியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் கெய்ர் பெடர்சன், மோதல்கள் மற்றும் கொலைகள் பற்றிய அறிக்கைகளால் தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முழு பிராந்தியத்தில் இரத்தக்களரி:
முதல் தொடரும் இப்பகுதி அலாவைட் சிறுபான்மையினரின் மையப்பகுதியாகவும்,
அசாத்குடும்பத்தின் கோட்டையாகவும் இருந்தது. இந்த தொடர் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையின் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் அசாத் கவிழ்க்கப்பட்டதிலிருந்து மிக மோசமான இரத்தக்களரி இதுவாகும்.
அசாத்குடும்பத்தின் கோட்டையாகவும் இருந்தது. இந்த தொடர் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையின் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் அசாத் கவிழ்க்கப்பட்டதிலிருந்து மிக மோசமான இரத்தக்களரி இதுவாகும்.இந்த மோதல்கள் முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்துகிறது என்று துருக்கியும் ரஷ்யாவும் எச்சரித்துள்ளன. மேலும் இந்த மோதல்களுக்குப் பிறகு வன்முறைச் சூழலை தவிர்க்குமாறு சிரியாவை ஜெர்மனி அரசும் வலியுறுத்தியுள்ளது.
![]()