பலதும் பத்தும்

போதையால் மூக்கை இழந்த பெண்

அமெரிக்காவில் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்ணொருவர் தனது மூக்கை இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

சிகாகோவில் வசிக்கும் கெல்லி கோசிரா என்ற பெண் 2017 ஆம் ஆண்டு, நண்பர்களுடன் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார்.

இதன்போது அவரது தோழிகளில் ஒருவர் அவருக்கு கொக்கைன் போதைப்பொருளை முகர்ந்து பார்க்க கொடுத்தார்.

சில மாதங்களுக்குள், அவர் இதற்கு மிகவும் அடிமையாகி, ஒவ்வொரு நாளும் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இதனால் அவர் தனது தூக்கத்தையும் உணவையும் கூட புறக்கணித்தார். வெறும் 19 மாதங்களில், கெல்லி தனது போதைக்காக 2 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

சில மாதங்களுக்குப் பிறகு, அவரது மூக்கில் இரத்தம் கசியத் தொடங்கியது. பின்னர் அவரது மூக்கிலிருந்து சதை துண்டுகள் இரத்தத்துடன் வெளியேறத் தொடங்கிய போது நிலைமை மோசமடைந்தது.

இது தானாகவே குணமாகும் என்று அவர் நினைத்துள்ளார்.

இருப்பினும், அவரது மூக்கு கடுமையாக சேதமடைந்து, முகத்தில் ஒரு துளையும் ஏற்பட்டது.

பின்னர் அவரது குடும்பத்தினர் தலையிட்டதால் ​​2021 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்தார்.

அப்போதிலிருந்து, அவரது மூக்கில் 15 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அந்த துளையை சரி செய்ய முயற்சித்துள்ளார்.

ஒரு அறுவை சிகிச்சையில், அவரது மூக்கின் நுனி, அவரது நெற்றிக்கு அருகில் உள்ள தோலைப் பயன்படுத்தி மறுகட்டமைக்கப்பட்டது.

இதன் பின்னர் அவர் தற்போது படிப்படையாக குணமடைந்து வருகிறார்.

கெல்லி இப்போது தனது அனுபவங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், மற்றவர்கள் போதைப்பொருள் உட்கொள்வதைத் தடுக்கவும் விரும்புகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button