பலதும் பத்தும்

புதைக்கப்பட்ட சடலத்தை இறைச்சிக்கடை முன் வீசி சென்ற நபர்!

இந்தியாவின் தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் இறைச்சிக்கடை நடத்தி வருபவர் மணியரசன். இவர் தனக்கு பழக்கமான சுடுகாட்டில் பணியாற்றி வரும் குமார் என்பவருக்கு இலவசமாக இறைச்சி வழங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,     இறைச்சிக்கடைக்கு வந்த குமார், மணியரசனிடம் இலவசமாக இறைச்சி வழங்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் குமாருக்கு இலவசமாக இறைச்சி வழங்க மணியரசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அங்கிருந்து கிளம்பிச் சென்று, சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளார். பின்னர் அந்த சடலத்தை எடுத்து வந்து மணியரசனின் இறைச்சிக்கடை முன்பு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், உடலை வீசிவிட்டு தப்பிச் சென்ற குமாரரை தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button