பலதும் பத்தும்

ஒரு மணிநேரம் ஸ்மார்ட்போன் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

நொடிப் பொழுதில் மனிதனின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய அத்தியாவசிய பொருளாக ஸ்மார்ட்போன்கள் மாறி வருகின்றன. உள்ளங்கையில் ஸ்மாட்போன்களை வைத்தப்படி உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் பெறுகிறோம். கணினியின் பாதிச் சேவையை ஆற்றிவரும் கையடக்க தொலைபேசிகள், மனிதர்களின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

அதேநேரத்தில், இந்த ஸ்மார்ட்போன்களால் ஆபத்தும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்மார்ட்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாகவும், தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் பல்வேறு தீமைகள் விளைகிறது. அந்த வகையில், ஸ்மார்ட்போன்களை நாளாந்தம் எவ்வளவு நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் என்ன ஆபத்து ஏற்படும் என்பது குறித்து ஜாமா நெட்வொர்க் நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஸ்மார்ட்போன், மடிக்கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. ‘ஒருநாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சில ஆண்டுகளில் குறும்பார்வை குறைபாடு ஏற்படும்’ என எச்சரித்துள்ளது.

மேலும் அதற்கு மேலான நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் அது மூளை பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button