முகநூல்

இந்த பூமி நமக்குச் சொந்தமில்லை. நாம்தான் பூமிக்குச் சொந்தம்

“இந்த பூமி நமக்குச் சொந்தமில்லை. நாம்தான் பூமிக்குச் சொந்தமாய் இருக்கிறோம்.”
இந்தப் படத்தையும் அதிலுள்ள வாசகத்தையும் இணைத்துப் பார்க்கையில், மனசை ஈர்க்கும் கவித்துவம் இழையோடியிருப்பதாய் ஒரு பரவசம் தோன்றுகிறது.
புல்லாங்குழல் இசைக்கும் பழங்குடி மனிதன், பூமிக்கு ஒளியேற்றும் சூரியன், புல்வெளி, புள்ளியிட்ட வெண்குதிரை…
இந்த அற்புதக் கலவையில் ஒரு காவியத் தன்மை ஒளிந்திருக்கிறது.
பூமி நமக்குச் சொந்தமில்லை. பூமிக்கு நாம்தான் சொந்தம் என்பதில் தத்துவ மனம் கனிந்து கலந்திருக்கிறது.
எதுவுமே நிரந்தர சொந்தமில்லாத உலகத்தில், ஏதேதோ சொந்தங்களுக்காய், ஏதேதோ உடைமைகளுக்காய் அலைகிறோம்.
நிலைத்தலுக்கும் நிலையின்மைக்கும் இடையிலான நெடும் போரினுள், நம் வாழ்க்கையின் கடிவாளம் நின்று தடுமாறுகிறது.
பிடிப்பும் பிடிப்பின்மையும் கலந்த இந்த வாழ்க்கை படிப்பினைகள் நிறைந்தது.
எதை விட்டுச் செல்வது?
எதைக் கூடவே கொண்டு செல்வது?
அது அதை அந்தந்த இடத்தில் வைப்போம். அவசியமற்றவற்றை நீக்கி விடுவோம். சிலபோது அழித்தலும் அகற்றலும் அவசியம்.
அன்பும் அழகிய செயல்களும் நிறைந்த வண்ணங்களால் இந்த வாழ்வை வரைவோம்.
சிராஜ் மஷ்ஹூர்
https://web.facebook.com/siraj.mashoor

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *