இலங்கை

நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டு முயற்சிக்குப் பின்னால் இருப்பது “கணேமுல்ல சஞ்சீவவின்” நெருங்கிய நண்பரான கமாண்டோ சாலிந்தவா?

நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்ததினால் இந்த கொலை முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சமிந்த ஹெவத் மிரிஸ் அந்தனி என்பவரின் மூத்த மகனை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் நெருங்கிய நண்பரான “கமாண்டோ சாலிந்த” என்பவரின் தலைமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *