Uncategorizedபலதும் பத்தும்

உலகில் மிக ஆபத்தான திகில் படம்

அனைத்து நாடுகளும் தடை செய்த படத்தின் கதை இதுதான்!; சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். ஆனால் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திரைப்படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கவும், உணர்ச்சிவசப்பட வைக்கவும் அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. பார்வையாளர்களை அச்சுறுத்தக்கூடிய படங்கள் மிக குறைவாகவே வெளிவருகின்றன.
திகில் படங்கள் சுமாரான வெற்றியை பெறுவதால் இதனை உருவாக்குவதற்கு தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் முன்பு வெளியான ஒரு திகில் படத்தை பார்த்த பின்னர் பலருக்கும் மனரீதியில் பாதிப்பு ஏற்பட்டது.
அதற்கு படத்தின் பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணம்.
இந்த படத்தை உலகின் மிக ஆபத்தான படம் என்றும் கூறுகிறார்கள். இந்த திரைப்படம் 1 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்கள் ஓடுகிறது.
‘ஆன்ட்ரம் தி டெட்லிஸ்ட் பிலிம் எவர் மேட்’ என்பதுதான் இந்த படத்துடைய டைட்டில். இந்த திரைப்படம் ஒரு சகோதரன் மற்றும் சகோதரி இடையிலான வாழ்க்கையை படமாக்குகிறது.
இரண்டு சகோதரர்கள் தங்களது செல்ல நாயின் உயிரிழப்பால் வருத்தம் அடைகிறார்கள். அந்த நாயின் ஆன்மாவை காப்பாற்றுவதற்கு இருவரும் நரகத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள்.
விசித்திரமான கதைக்களத்துடன் கூடிய இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. 1988 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த படம் ஒளிபரப்பாகும் போது படத்தை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு பார்வையாளர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
1988 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் முதலும் கடைசியுமாக வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். ஆனால் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திரைப்படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *