Uncategorizedஇலங்கை

மே 9 போராட்டத்தில் எரிந்த வீடுகளுக்காக 122.41 கோடி ரூபாவை பெற்ற 43 அரசியல்வாதிகள்

2022 மே 9 போராட்ட காலத்தில் சொத்துக்கள் சேதமடைந்ததாக தெரிவித்து அரசியல்வாதிகள் 43 பேர் 122.41 கோடி ரூபாவை நஷ்ட ஈடாக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அவ்வாறு நிதி பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான பெயர் பட்டியலையும் வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற புலமைச் சொத்து சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவற்றை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆட்சியில் அகப்பையை கையில் வைத்திருந்தவர்கள் தாமே பகிர்ந்துகொண்டு உண்டுள்ளனர். அதனை இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்தவில்லை. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி எவ்வாறு மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர் என்பதனை இதற்கு முன்னர் கூறியிருந்தோம். இவர்களின் பெயர்கள் தொடர்பில் சில எம்.பிகள் கேட்டனர். இன்னும் சில நாட்களில் இருக்கும் பெயர்களின் பின்னால் உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம். உங்களின் பெயரில் இல்லாவிட்டாலும் சாரதி, பியோன் மற்றும் உறவினரின் பெயரில் அந்த அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கூறுவோம்.

போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

இதேவேளை ஜனாதிபதி நிதியத்தில் எவ்வாறு பணம் பெற்றுள்ளனர் என்ற தகவல்களையும் நாங்கள் வெளியிட்டிருந்தோம்.

அடுத்ததாக 2022ஆம் ஆண்டில் தமது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அரசியல்வாதிகள் அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு நஷ்ட ஈட்டை பெற்றுள்ளனர் என்ற தகவலை கூறுகின்றோம். சில பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு நஷ்டத்தை அதிகமாக மதிப்பீடு செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பபட்டுள்ளதாக அப்போது ஊடகங்களில் பார்த்தோம்.

சாதாரணமாக எமது நாட்டில் இயற்கை அனர்த்தமாக இருந்தாலும் சொத்துக்களுக்கு முழுமையான பாதிப்பு ஏற்படும் போது உயர்ந்தபட்டசமாக 25 இலட்சம் ரூபாவே வழங்க முடியும். அதுவும் சரியாக கிடைப்பதில்லை. ஆனால் சொத்து பாதிப்பை பயன்படுத்தி அதிகாரத்தில் இருந்தவர்கள் எவ்வாறு நஷ்ட ஈட்டை பெற்றுள்ளனர் என்பதனை கூறுகின்றேன்.

கபில நுவான் அதுகோரல 504,000 ரூபா, விமலவீர திசாநாயக்க 550,000 ரூபா, கீதா குமாரசிங்க 972,000 ரூபா, திஸ்ஸகுட்டியாராச்சி 1,143,000 ரூபா, குணபால ரத்னசேகர 1,412,780 ரூபா, பிரேமநாத் சி. தொலவத்த 2,300,000 ரூபா, ஜயரத்ன பிரியங்கரட்ன 2,348,000 ரூபா, சம்பத் அதுக்கோரல 2,540,610ரூபா, ஜயந்த கெட்டகொட 2,814,800ரூபா, விமல் வீரவன்ச 2,954,000 ரூபா, பேராசிரியர் சன்ன ஜயசுமன ர3,334,000ரூபா, அகில எல்லாவல 3,554,250ரூபா, சமல் ராஜபக்ஷ 6,539,374 ரூபா, சந்திம வீரக்கொடி 6,948,800ரூபா, அசோக பிரியந்த 7,295,000 ரூபா, சமன்பிரிய ஹேரத் 105.2 இலட்சம் ரூபா, ஜனக பண்டார தென்னகோன் 105.5 இலட்சம் ரூபா, ரோஹித அபேகுணவர்தன 116.4 லட்சம் ரூபா, சீதா அரம்பேபொல 137.8 இலட்சம் ரூபா, சஹான் பிரதீப் 171.3 இலட்சம் ரூபா,ஷெஹான் சேமசிங்க 185.1 இலட்சம் ரூபா, இந்திக அனுருத்த 195.5 இலட்சம் ருபா, மிலன் ஜயதிலகே 223 இலட்சம் ரூபா, ரமேஷ் பத்திரணா 281 இலட்சம் ரூபா, துமிந்த திசாநாயக்க 288 இலட்சம் ரூபா, கனக ஹேரத் 292 இலட்சம் ரூபா, டிபி ஹெரத் 321 இலட்சம் ரூபா, பிரசன்ன ரணவீர 327 இலட்சம் ரூபா, டபிள்யூ. டி. வீரசிங்க ரூ. 372 இலட்சம் ரூபா, சாந்த பண்டாரா 391 இலட்சம் ரூபா. எஸ்.எம். சந்திரசேன 438 இலட்சம் ரூபா., சனத் நிஷாந்த 427 இலட்சம் ரூபா, சிறிபால கம்லத் 509 இலட்சம் ரூபா, அருந்திக பெர்னாண்டோ 552 இலட்சம் ரூபா, சுமித் உடுகும்புர 559 இலட்சம் ரூபா, பிரசன்ன ரணதுங்க 561 இலட்சம் ரூபா, கோகிலா குணவர்தன 587 இலட்சம் ரூபா, மொஹான் டி சில்வா 601 இலட்சம் ரூபா, நிமல் லான்சா 692 இலட்சம் ரூபா, அலி சப்ரி ரஹீம் 709 இலட்சம் ரூபா, காமினி லொகுகே 749 இலட்சம் ரூபா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 இலட்சம் ரூபா, கெஹெலிய ரம்புக்வெல்ல 959 இலட்சம் ரூபா என இவர்கள் நிதியை பெற்றுள்ளனர்.

இவர்கள் 43 பேர் மாத்திரம் 122 கோடியே 41 இலட்சத்து 34 ஆயிரத்து 737 ரூபாவை பெற்றுள்ளனர். இவ்வாறான அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்காகவே மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இதனை நாங்கள் மாற்றுவோம். எதிர்க்கட்சி எவ்வகையான இடையூறுகளை செய்தாலும் இந்த அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் நிச்சயமாக மாற்றுவோம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *