இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆசாத் மௌலான இலங்கை வருவார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத் மௌலான சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.இதற்காக அவர்கள்,தற்போது சுவிற்சர்லாந்திலுக்கு ஆசாத் மௌலானவை தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவரை இங்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனையை அனுபவித்த வேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத்மௌலானா சனல் 4 க்கு தெரிவித்தார் என அந்த அதிகாரி டெய்லி மிரருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மௌலானா ஏற்கனவே இது குறித்த விபரங்களை சனல் 4ற்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானவுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த அதிகாரிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனையை அனுபவித்த வேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சிஐடி அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

ஆசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சிஐடியினர் பல தடவை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள சிஐடியினர் இந்த சதி முயற்சியில் தொடர்புபட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் கொலை தொடர்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக சஹ்ரான் குழுவினரின் உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *