இலங்கை

அரசுக்கான மக்களின் ஆதரவு தற்காலிகமானது; மகிந்தவின் பாணியில் அநுர

தேசிய மக்கள் அரசாங்கத்துக்கு தற்போது மக்கள் வழங்கும் ஆதரவு தற்காலிகமானதெனவும் வாக்கு வங்கியை பராமரிக்க அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், ஜே.வி.பி. தனித்து போட்டியிட்டிருந்தால் குறைந்தளவான வாக்குகளையே பெற்ற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு தற்போது கிடைத்துள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது, ஜே.வி.பிக்கு சொந்தமானதல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டு பெற்றுக்கொண்ட வாக்குகளை விடவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகவே அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பொதுமக்கள் காட்டும் விசுவாசம் மிகவும் தற்காலிகமானது. அந்த நிலையற்ற வாக்காளர் தளத்தைப் பராமரிக்க, அரசாங்கம் அந்த மக்களின் எதிர்பார்ப்புகளுடன் பெரும்பாலும் ஒத்துப்போக வேண்டும் என்றும் கூறினார்.

அதன்படி, மஹிந்த ராஜபக்ச செய்ததைப் போலவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் குழந்தைகளைத் தூக்கி கொஞ்சுவது, கட்டிப் பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாதெனவும் தெரிவித்தார்.

தற்போதே உண்மை நிலை புரிவதாகவும் தற்போது நாம் தகவல் யுகத்தில் வாழ்வதாகவும் இதனால் தகவல்களை எந்த சந்தர்ப்பத்திலும் மறைக்க முயாதெனவும் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற செயல்முறைகள் மூலம் மக்களை தற்காலிகமாக தக்க வைத்துக் கொள்ள முடியும், ஆனால் மக்கள் தங்கள் வயிறு மற்றும் பொக்கட்டுக்கள் பற்றி சிந்திப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *