இலங்கை

தேசிய மக்கள் சக்தி ஜே.வி.பி. முரண்பாடு

தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான தொடர்ச்சியான முரண்பாடுகள் காரணமாகவே அரசாங்கத்தால் பல உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பலர் தொடர்ச்சியாக இராஜினாமா செய்வதாகவும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. அல்லாத தேசிய மக்கள் சக்தி குழுக்கள் தற்போது அரசியல் ரீதியாக சக்தியற்றவையாக இருப்பதாகவும் அந்த தேசிய மக்கள் சக்தி குழுக்கள்; தற்போது அரசியல் ரீதியாக ஒரு குழப்பமான நிலையில் உள்ளன. ஜே.வி.பியில் யாரிடமிருந்தும் ஆதரவு இல்லாமல், எதிலும் எந்தக் கருத்தும் இல்லாமல், அரசாங்கத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல் காலத்தில், இந்த குழுக்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதானியான பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஜே.வி.பி.யால் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து தெரிவித்திருந்தன. இருப்பினும், அரசாங்கத்திற்குள் ஹரிணி அமரசூரியவுக்கு தற்போது அதிக இடம் இல்லாததால், அவர் தற்போது கிட்டத்தட்ட முழுமையான அரசியல் மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.

அரசாங்கத்திற்கு ஏற்கனவே வாக்களித்த மக்களின் அழுத்தங்களுக்கு மத்தியில், ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளியே வந்து அரசாங்கத்தின் சார்பாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தாலும், பிரதமராக ஹரிணி அமரசூரிய மௌனமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குள் ஜே.வி.பி- தேசிய மக்கள் சக்தி நெருக்கடியைத் தூண்டிய முக்கிய நிகழ்வு, தொலைக்காட்சி நிலையத்தின் தலைவராகப் பணியாற்றிய சேனேஷ் பண்டார திசாநாயக்கவின் ராஜினாமா என்பதை நாங்கள் முன்னர் சுட்டிக்காட்டினோம்.

அனுர-ஹரிணி அமைச்சரவையில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் பணியாற்றிய விஜித ஹேரத்தால், சேனேஷ் பண்டார தேசிய தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பொதுத் தேர்தலுக்குப் பிறகு, வெகுஜன ஊடக அமைச்சர் பதவி டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

அனுர, விஜித மற்றும் ஹரிணி ஆகியோர் அமைச்சரவை பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, விஜிதவுடனான நெருங்கிய உறவின் காரணமாக ரமால் சிறிவர்தன மீண்டும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். விஜிதவின் அமைச்சு மாறி, போக்குவரத்து அமைச்சர் பதவி பிமல் ரத்நாயக்கவிடம் சென்றபோது, ரமால் சிறிவர்தன திடீரென தனது இராஜினாமாவை அறிவித்திருந்தார்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் தேசிய வீடமைப்பு அதிகார சபை தலைவராக நியமிக்கப்பட்ட என்.பி.மொன்டி ரணதுங்க தான் பதவி விலகினார். அனுர, விஜித மற்றும் ஹரிணி அமைச்சரவை நாட்டை ஆட்சி செய்த காலத்தில், இவர் அதிகார சபையின் தலைவர் நியமிக்கப்பட்டார்.

எனினும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைமைப் பதவி டொக்டர் அனுர கருணாதிலக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அமைச்சருக்கு ஒரு நீண்ட கடிதத்தை அனுப்பி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தார். இது புதிய அரசாங்கத்திற்குள் உருவாகி வரும் மற்றொரு நெருக்கடியின் ஒரு அம்சமாகவும் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *