வட , கிழக்கில் சுயநிர்ணயம், சுயாட்சி அடிப்படையில் நாங்கள் வாழக்கூடிய ஒரு தினத்தினை ஜனாதிபதி ஏற்படுத்தி தர வேண்டும்

வடக்கு,கிழக்கில் சுயநிர்ணயம். சுயாட்சி அடிப்படையில் நாங்கள் வாழக்கூடிய ஒரு தினத்தினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்படுத்தி தர வேண்டும். அதுதான் தமிழர்களின் உண்மையான சுதந்திர தினமாக இருக்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டஎம்.பி. ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய நிலையில் யுத்தம் முடிவடைந்து. கிட்டத்தட்ட 2009 க்கு பின்னர். நாங்கள் 16 ஆண்டுகள் கடந்து. இருக்கின்றோம். ஆனால் உண்மையில் நாங்கள். சுதந்திரத்தை பெற்றிருக்கின்றோமா. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குரிய. நீதி கிடைத்து இருக்கின்றதா. உண்மையை கண்டறிந்து இருக்கிறோமா. அதேபோன்று இந்த இழக்கப்பட்ட உயிர்களுக்கான நீதி பரிகாரம் கிடைத்து இருக்கின்றதா என்ற பார்க்கும்போது உண்மையில் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது.
எனவே காணாமல் ஆக்கப்பட்ட. உறவுகள் இந்த சுதந்திர தினத்தினை. தாங்கள் கொண்டாட கூடிய மனநிலையில் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை,உண்மை கண்டறியப்படவில்லை, பரிகார நீதி வழங்கப்படவில்லை. என்ற கோஷங்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எங்களுக்கு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது. அவர்கள் துன்பத்தோடும் துயரத்தோடும் அழுகை கண்ணீரோடும். இருக்கின்ற போதும் நாங்கள் இந்த சுதந்திர தினத்தினை. எவ்வாறு கொண்டாட முடியும் என்பதை அரசிடம் கேட்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, படையில் உள்ளவர்கள் சில பகுதியினர் ஆயுதங்களைக் கொண்டு சில பாதாள உலக கோஷ்டி செயற்பாடுகளை செய்துவிட்டு அவர்கள் முகாம்களில் மறைந்து இருக்கின்றார்கள் என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தார். அப்படி. பார்க்க போனால் கடந்த காலத்தில் எமது உறவுகள் கடத்தப்பட்டதற்கும் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் அல்லது புதைக்கப்பட்டதற்கும் இப்படியான செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு காணப்படவில்லை. உள்நாட்டு ரீதியாகவும் தீர்வு காணப்படவில்லை. சர்வதேச ரீதியாகவும் தீர்வு காணப்படவில்லை. ஐக்கிய நாடுகள் தேசிய சபையின் மனித உரிமை பேரவையானது உண்மையை கண்டறிய சொன்னார்கள் நீதியை வழங்க சொன்னார்கள் மீண்டும் அநியாயங்கள் அராஜகங்கள். நடைபெறாமல் பாதுகாப்பதற்கான பொறிமுறையை கையாளுங்கள் எனச் சொன்னார்கள். இவற்றில் எதுவுமே நடக்கவில்லை.
ஆகவே நாங்கள் இந்த புதிய அரசிடம் சொல்கின்ற விடயம் என்னவென்றால். நீங்கள் குறுகிய காலமாக வந்திருந்தாலும் கூட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி வழங்குவதற்குரிய செயல்பாடுகளில் நீங்கள் படிகளை தாண்டவில்லை.அதேபோன்று சர்வதேச விசாரணைக்கு சுயாதீனமான, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு நீங்கள் இடமளிப்பதாக தெரியவில்லை. ஆகவே இறுதி யுத்தத்தில் நடாத்தப்பட்ட கொடூரமான செயற்பாட்டிற்கு நாங்கள் நீதியைகேட்கின்றோம், எமது இழப்புக்குரிய காரணங்களை கேட்கின்றோம். அந்த இழப்புகளை ஏற்படுத்தியவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.
இப்படியான செயற்பாடுகள் இல்லாதபடியால். எதிர்வரும் சுதந்திர தினத்தினை நாங்கள் ஒரு கொண்டாட்ட தினம் அல்லாமல் ஒரு திண்டாட்ட தினமாக ஒரு துக்க தினமாக பிரகடனபடுத்தவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுகின்றோம்.
சுதந்திரம் என்பது பேரளவில் நாங்கள் கொண்டாடும் தினமாக அல்லாமல் பேசக்கூடிய தினமாக அல்லாமல், உங்களது உள்ளார்ந்த ரீதியாக உணர்வு ரீதியாக செயற்பாட்டு ரீதியாக கொண்டாட கூடிய ஒரு தினத்தை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். அந்த தினம் என்பது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வினை வழங்க வேண்டிய ஒரு தினமாக இருக்க வேண்டும். நியாயமான ஒரு தினமாக இருக்க வேண்டும். கையகப்பபடுத்தப்பட்ட பறிக்கப்பட்ட காணிகளை முழுமையாக விடுவிக்க பட்ட தினமாக இருக்க வேண்டும். நம்முடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்ட தினமாக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்கின்ற மனித குலத்திற்கு எதிரான மனித உரிமைக்கு எதிரான அந்த சட்டங்களை அகற்றுகின்ற ஒரு தினமாக இருக்க வேண்டும். நாங்கள் வடக்கு கிழக்கில் சுதந்திரமாக சுவாசிக்க கூடிய ஒரு தினமாக இருக்க வேண்டும்.
அதேபோல வடக்கு கிழக்கில் சுயநிர்ணயம். சுயாட்சி அடிப்படையில் நாங்கள் வாழக்கூடிய ஒரு தினத்தினை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அதுதான் தமிழர்களின் உண்மையான சுதந்திர தினமாக. இருக்க முடியும் என்றார்.
![]()