பலதும் பத்தும்
வித்தியாசமான முறையில் வழங்கப்பட்ட போனஸ்!

சீனாவில் அமைந்துள்ள நிறுவனமொன்று தனது ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி மேலதிக கொடுப்பனவை வித்தியாசமான முறையில் போட்டியொன்றை ஏற்பாடு செய்து வழங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த போட்டியில், ஒரு மேசையில் 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரப்பட்டுள்ளது.
அதில் உள்ள பணத்தை நிறுவனத்தின் ஊழியர்கள் 15 நிமிடங்களில் எண்ணுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு ஊழியர்களால் எண்ணப்படும் பணம் அவர்களுக்கு போனஸாக வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.