கட்டுரைகள்

பவளத்திட்டில் பழந்தமிழர் கறி!… தொடர் – 4 …. சங்கர சுப்பிரமணியன்.

Screenshot

கடலில் நீந்தி பவளப்பாறையைப் பார்க்க வேண்டாமென்றால் மெய் வருத்தம் பாராமலிருக்க (நோவாமல் நோம்பிருக்க) மற்ற இரண்டு இரண்டு வழிகள் உள்ளன. இதைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் நம்மை வற்பறுத்தவில்லை. நீந்தத் தெரிந்தவர்கள் பலர் பவளத்திட்டை நீந்தி பார்வையிட்டனர். நீந்தாமலும் பலர் பார்வையிட்டனர். அது நான் சொல்லும் கரணங்களுக்காகவும் கூட இருக்கலாம்.

இப்படியாக பவளப் பாறைகளை பார்வயிட்ட பின் கப்பலுடன் இணைக்கபட்டிருந்த
தளத்தில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை அடைந்தோம். செவிக்கு உணவில்லாதபோது என்று வள்ளுவன் கூறியபடி அங்கே கண்களுக்கு உணவில்லாதபோது வள்ளுவன் கூறாதபடி நன்றாய் வயிற்றுக்கும் ஈயப்பட்டது.

மதிய உணவாக வழங்கப்பட்ட உணவில் பல வகையான உணவுகள் இருந்தன. மரக்கறி உணவும் இறைச்சி உணவும் இருந்தன. உணவின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் எந்த கறிவகையிலும் எந்த நாட்டின் பெயரும் குறிப்பிடவில்லை. மாறாக ஒரு கறியில் மட்டுமே ஒரு நாட்டின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது.

அது சிக்கன் கறி. உடனே இந்தியாவிலுள்ள பள்ளிப் பாளையம் சிக்கனா? செட்டுநாட்டு சிக்கன் கறியா? ஹைதராபாதி சிக்கனா? சிக்கன் சிக்ஸ்டிபைவா? அல்லது மலபார் சிக்கனா? என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.இது எதுவுமே இல்லை. இலங்கைக் கோழிக்கறி என்றுதான் குறிப்பிட்டிருந்தது.

இலங்கைக் கோழிக்கறி என்றதும் எனக்கு தமிழர் நினைவுதான் வந்தது. யார் யார் எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்களோ அவர்களுக்கு அந்த நினைவைதானே வரும். மேலும் அதற்கு காரணங்களும் இருந்தன. ஒன்று இலங்கை நண்பர்கள் வீட்டில் பலமுறை சாப்பிட்டதன் விளைவாக எனக்கு பழகிப்போன சுவை.

இன்னொன்று உலகின் மூத்தகுடி மூத்த மொழி என்ற பெருமைகளை தமிழர் கொண்டிருப்பது. இந்த கறி இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் பொதுவான உணவா என்பது எனக்கு சரிவரத் தெரியாது. ஆனால் எனது இலங்கைத் தமிழ் நண்பர்கள் இல்லங்களில் இவ்வுணவை சாப்பிட்டிருக்கிறேன். ஆதலால் இலங்கை வாழ் தமிழரின் உணவாக இருக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. இதற்குண்டான காரணங்களையும் என்னால் கூறமுடியும்.

குறிஞ்சித் திணையில் வாழ்ந்த தமிழன் மலியிலிருந்து இறங்கி முல்லை நிலத்துக்கு வந்தான்.

முல்லை நிலத்தில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த தமிழன் காடுகளில் ஒரு பகுதியை தீயிட்டு அழித்து மருத நிலமாக மாற்றினான். மாற்றிய மருதநிலத்தில்
உலகில் முதன்முதலாக உழவுத்தொழிலை தொடங்கினான்.

அப்படி அழிக்கப்பட்ட காடுகளில் பெரும்பாலும் பனங்காடுகளாகவே இருந்தது. இந்த பனங்காடுகளை அழித்ததை மறவாது கார்த்திகை திருநாளில் வெட்டிய பனைமரத்தை நட்டு அதனை சுற்றி பனை ஓலைகளை வேய்ந்நு சொக்கப்பனை கொளுத்தி நினைவு கூர்ந்தான்.
அந்நினைவே இன்று ஆலயங்களில் கார்த்திகை திருநாளில் சொக்கப்பனை என்று கொளுத்துகிறார்கள்.

குறிஞ்சி நிலத்திலிருந்து கீழறங்கி முல்லை நிலத்துக்கு வந்தான். அதுவரை கற்கலால் ஆன கருவிகளைப் பயன்படுத்தியவன் இரும்பை கண்டு பிடித்தான். உலகிலேயே முதன்முதல் இரும்பைக் கண்டு பிடித்தவன் தமிழன்தான் என்பதை ஐரோப்பிய ஆய்வாளரான பேராசிசிரியர் ஹல்லாங் கூறுகிறார்.

இரும்பை தமிழர்தான் முதலில் கண்டுபிடித்தனர் என்றால் இங்கொரு கூட்டம் அதெல்லாம் தமிழர் கண்டு பிடித்திருக்க வாய்ப்பில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது. இவர் தமிழர் ஆதிமனிதர்களாக இருந்தபோதே தற்செயலாக இரும்பைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்கிறார்.

இவ்வாறு இனம், மொழிகளில் முதன்மையாக இருந்த தமிழன் வேட்டைச் சமூகமாக இருந்தகாலத்தில் இரும்பைக் கண்டுபிடித்தான். இரும்பைக் கண்டுபிடித்தபின் காட்டை அழித்து மருதநிலத்தை உருவாக்கி உழவுத் தொழிலிலும் முன்னோடியாகத் திகழ்ந்தான்.

எல்லாவற்றிலும் முன்னோடியா இருந்த தமிழன் உணவைச் சமைத்து சாப்பிடுவதில் மட்டும் பின்தங்கியா இருப்பான். இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்களே. உலகின் மூத்தகுடி தமிழர்கள் என்றிருக்கும்போது ஒரேநிலப் பரப்பாக இருந்தபோது இலங்கைப்பகுதியிலும் தமிழர்களே இருந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு வேறொருவர் வந்து உணவுவைச் சமைக்கும்முறையை கற்றுக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்திலேயே கோழியைப் பிடிக்கவும் கற்றிருப்பான். இன்றும் தேவைப்படும்போது கோழியை விரட்டிப் பிடிப்பதை கிராமங்களில் காணலாம்.

வேட்டையாடுவதற்கு பல ஆயதங்கள் தேவை. மான், முயல் வேட்டைக்கு நாய் தேவை. எனவே வேட்டையிலேயே சுலபமானது கோழி பிடிப்பதாகும். ஆதலால்தான் இத்தகைய எளிய வேலையைக் கூட செய்யமுடியாதவனை ஒரு பழமொழியைச் சொல்லி அவனது கையாலாகத் தனத்தை சுட்டிக் காட்டுவார்கள்.

அப்படிப்பட்ட ஒருவன் நான் அதைச் செய்யப் இதைச் செய்யப் போகுறேன் என்றால் அவனைப் பார்த்து கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப்போகிறானாம் என்பதே அப்பழமொழி.

ஆதலால் பலவற்றில் முன்னோடிகளாக வாழ்ந்திருக்கும் தமிழர் உணவில் உணவில் கோழிக்கறியும் இருந்திருக்கும். இந்த
அடிப்படையில்தான் பழந்தமிழர் கறி என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக பவளத்திட்டில் கப்பலில் வைக்கப் பட்டிருந்த கோழிக்கறியை இந்திய கோழிக்கறி என்றோ பாகிஸ்தான் கோழிக்கறி அல்லது பங்களாதேஷ் கோழிக்கறி என்றோ குறிப்பிடவில்லை. மாறாக ஶ்ரீலங்கன் கோழிக்கறி என்றுதான் குறிப்பிட்டிருந்தது.

இந்திய இட்லி என்றால் தமிழ்நாடு என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. இந்திய

மைசூர்பாக் என்றால் கர்னாடகாவைச் சேர்ந்ததென்றோ இந்திய ரஸகுல்லா என்றால் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்ததென்றோ சொல்லத் தேவையில்லை.
இதே போன்றுதான் ஶ்ரீலங்கன் கோழிக்கறியைப் பற்றியும் தனியாகக் கூறத் தேவையில்லை

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியபடி நம் அருமை பெருமைகளை பிறர்சொல்ல வேண்டுமேயொழிய நாமே சொல்லக்கூடாது. அப்போதுதான் அது ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் போன்று இருக்கும். அதைத் தவிர்த்து நாம் எத்தகைய பெருமையுடையவர்களாக இருப்பினும் நம் பெருமைகளை நாமே கூவி கூவி ஏலமிடுவது சிறப்பல்ல.

நாம் சிலரை நம் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து விருந்தளித்து மகிழ்கிறோம். நாம் அளித்த உணவு மிகவும் நன்றாக இருந்தால் கட்டாயம் பாராட்டுவார்கள். சுவையற்ற உணவாக இருந்தால்கூட நாகரிகம் கருதி பாராட்டுவார்கள். சுவையுள்ள உணவாக இருந்து பாராட்டாது போனாலும் பரவாயில்லை. நாம் கொடுத்த உணவைப்பற்றி நாமே ஆகா ஓகோ என்ற பாராட்டக் கூடாது.

-சங்கர சுப்பிரமணியன்

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *