மகிந்தவை காக்க எம்மிடம் ஆயுதப் படை இல்லை

முன்னாள் ஜனாதிபதியான எனது தந்தையை எங்களால் பார்த்துக்கொள்ள முடியும் ஆனால் அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள விடயத்தை அரசியலமைப்பை மீறி செய்ய முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக கூறப்படுவது தொடர்பிலும், அவரின் மகன்களுக்கு அவரை பார்த்துக்கொள்ள முடியாதா என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள கருத்து தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறினார்.

அதன்போது நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவிக்கையில்,

தாய், தந்தையை எங்களுக்கு பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் எங்களுக்கு பக்கத்து வீட்டில் இருந்து உள்ளாடை முதல் அனைத்தையும் வாங்கி அணிந்து பழக்கம் கிடையாது. நாங்கள் தாய், தந்தையை பார்த்துக்கொள்வோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு என்னிடமோ எமது கட்சியிடமோ ஆயுதப்படை கிடையாது. நாங்கள் எப்போதும் ஜனநாயக அரசியல் முறைமையை நம்பியவர்களே. அத்துடன் அரசியல் ரீதியான விடயத்தில் குடும்பத்தினருக்கு தடையிடவும் முடியாது.

அதாவது முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் அவருக்கான இல்லம் தொடர்பான பொறுப்பு அரசியலமைப்பு ரீதியிலேயே அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள விடயத்தை மூன்று மகன்களின் தோல்களில் கொண்டு செல்லவும் முடியாது. நாங்கள் தாய், தந்தையை பார்த்துக்கொள்வோம். ஆனால் அரசியலமைப்பை மீறி தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றலோ அல்லது எங்களின் ஊடாக அரசியலமைப்பை மீறச் செய்ய எதிர்பார்த்தாலோ அதனை செய்ய முடியாது.

இதனால் அந்த வீட்டை விற்க வேண்டுமென்றால் எழுத்துமூலம் அறிவித்தால் நாங்கள் போகின்றோம் என்பதனை அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கின்றோம். இந்த வீடு வீதியில் செல்லும் போது இங்கே தங்கிக்கொள்ள வேண்டுமென்று வந்த வீடு கிடையாது. அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டதாகும். இதனால் அரசாங்கம் அது தொடர்பில் அறிவிக்க வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *