அநுர இருக்கும் வீடு 500 இலட்சம் ரூபா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை வீட்டில் இருந்து போகுமாறு கூறினால் மேலதிகமாக ஒருநாளேனும் அந்த வீட்டில் அவர் இருக்கமாட்டார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மகிந்தவின் வீட்டின் பெறுமதியை கூறும் அனுரகுமார திஸாநாயக்க தான் வசிக்குமம் வீட்டின் பெறுமதி 500 இலட்சம் ரூபா என்பதனையும் கூற வேண்டும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பான விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மகிந்த ராஜபக்‌ஷவுக்கு போகுமாறு கூறினால் அவர் உடனே போய்விடுவார். ஒரு நாளேனும் மேலதிகமாக இருக்கப் போவதில்லை. மூன்று பிள்ளைகளுக்கும் மகிந்தவை பார்த்துக்கொள்ள முடியாதா? என்று நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். ஆனால் மகிந்த ராஜபக்‌ஷ நாட்டை மீட்டவராகும். அவரின் பிள்ளைகள் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் அல்ல. அவர் தனது உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது நாட்டை பாதுகாத்தவர். இலங்கை சட்டத்திற்கமைய அவருக்கு சட்டத்திற்கமைய வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அவர் செய்துள்ளார். இதனை நலிந்த ஜயதிஸ்ஸ புரிந்துகொள்ளாதவராகவே இருக்கின்றார்.

மகிந்த ராஜபக்‌ஷ இப்போது வசிக்கும் வீட்டின் பெறுமதி தொடர்பில் கூறுகின்றனர். ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுளள வீட்டின் மதிப்பீட்டை செய்தால் அது 500 இலட்சம் ரூபா பெறுமதியானதாக இருக்கும். முடிந்தால் அவர் மக்களுக்கு நான் இவ்வளவு பெறுமதியான வீட்டில் இருக்கின்றேன் என்று கூற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *