இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! ; நௌஃபர் மௌலவி உட்பட 15 பேர் குற்றவாளிகள் 9 பேர் விடுதலை ; விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை, உதவி மற்றும் அனுசரணை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் நௌபர் மௌலவி உள்ளிட்ட 15 பேர் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வழக்கில் 9 பேர் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2019-ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டமை மற்றும் 568 பேர் காயமடைந்தமை தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, நௌபர் மௌலவி என்றழைக்கப்படும் மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌபர், கஃபூர் மாமா என்றழைக்கப்படும் மொஹமட் சரிபு ஆதம் லெப்பை, ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான், மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இப்ராஹிம் சாஹித் அப்துல் ஹக், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், மொஹமட் மன்சூர் மொஹமட் சன்ஸ்ஜீன், அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ், மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித், அப்துல் லதீஃப் மொஹமட் சாஃபி, ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர், மொஹமட் ஜவாஹிர் மொஹமட் அசன், மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாப, ரஷீத் மொஹமட் இப்ராஹிம், மொஹமட் அனீஃபா செய்னுல் ஆப்தீன், மொஹமட் முஸ்தஃபா மொஹமட் ஆரிஸ், கச்சி மொஹமது மொஹமது ஜிம்சித், செய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம், மொஹமட் முஸ்தஃபா மொஹமட் ரிஸ்வான், மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி, மொஹமட் அமீர் மொஹமட் அயத்துல்லா, ஹில்மி என்றழைக்கப்படும் மொஹமட் அன்சார்தீன் மொஹமட் ஹில்மி மற்றும் மொஹமட் அக்ரம் அஹ்கம் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 5 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நிறைவு செய்து, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பை அறிவித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அங்க வகிக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

23,270 குற்றச்சாட்டுகள்

24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவர் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற காலப்பகுதியில் உயிரிழந்தார். வழக்கு விசாரணையின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் பொலிஸாருக்கு வழங்கி இருந்த 10 ஒப்புதல் வாக்கு மூலங்களை சாட்சியாக ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இதற்கு மேலதிகமாக, அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள், மரபணு அறிக்கைகள், தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகள் ஆகியனவும் முறைப்பாட்டாளர் தரப்பினால் சாட்சிகளாக முன்வைக்கப்பட்டன.

மேலும், வெடிபொருட்கள், வெடிபொருட்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட 2,076 சான்று பொருட்களும் முறைப்பாட்டாளர் தரப்பினால் இந்த வழக்கு விசாரணைக்காக முன்வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 5 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நிறைவு செய்து, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பை அறிவித்தது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேர்
இதன்போது, சட்டமா அதிபர் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள 15 பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது.

இதன்படி மொஹமட் இப்ராஹிம் நெளபர் (நௌபர் மௌலவி), மொஹமட் சரிபு ஆதம் லெப்பை(அபு ஹாத்விக்), ஹயாத்து மொஹமட் மில்ஹான் (அபு சில்லா , மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர் , மொஹமட் இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா), அன்வர் முகம்மது ரிஸ்கான்(அபு தாரிக்) , மன்சூர் மொஹமட் சனாஸ்தீன் (அபு மிசான்), ஹுஸைனுல் ரிஸ்வி காஹிர் சமீர், மொஹமட் ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா), மொஹமட் முஸ்தபா ஹாரிஸ் (அபு நன்ஜியார்) , ராசிக் ராஸா ஹுஸைன், கச்சி மொஹமட் ஜஸ்மின் மற்றும் அப்துல் லதீப் மொஹமட் ஷாபி (ஷாபி மௌலவி / அபு புர்கான்) ஆகிய 15 பேரும் சகல குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 9 பேர்
இதேவேளை இந்த வழக்கில் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் 9 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மொஹட் சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்), மொஹட் இப்திகார் மொஹட் இன்சாப் (அபு முகம்மது), ரஷீத் முகம்மது இப்ராஹிம், சைனுல் ஆப்தீன் முகம்மது ஜசீம், மொஹட் முஸ்தபா முகம்மது ரிஸ்வான், மீரா சாஹிப் முகம்மது நப்கி (அபு சனா), மொஹட் அமீர் முகம்மது அயாத்துல்லா, மொஹட் அன்சார்தீன் முகம்மது இல்மி மற்றும் மொஹட் அக்ரம் அஹக்கம் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரான யாசின் பாவா அப்துல் ரவூப் என்பவர் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் சிறைக்காவலில் உயிரிழந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *