இந்தியா

பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

இந்தியாவில் கர்நாடக தலைநகர்பெங்களூரில் பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள குடோன் வீதிக்கு அருகில் நடந்தது.

பாதிக்கப்பட்ட பெண் யெலஹங்கா பகுதிக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தார். அந்த பெண், இருவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பஸ் வருமா என்று கேட்டுள்ளார்.

பெண்ணின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த இரு ஆண்களும் உதவி செய்பவர்களைப் போல் கட்டிக்கொண்டு பஸ் எங்கு நிற்கும் என்று தங்களுக்குத் தெரியும் என்று கூறி பெண்ணை குடோன் வீதிக்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம், தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *