முகநூல்
எண்ணிம உயிரியல் அடையாள அட்டையின் சாதக பாதகங்கள்! … (Pros and Cons of Biometric Digital ID) – Part-1

தற்போது, இலங்கை உயிரியல் அடையாளங்கள் அடங்கிய (Biometric) டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் ஒரு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், இது பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு அமைப்புகள், உளவுத்துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற தனியார் நிறுவனங்களால் தரவுகள் கசிந்து போகலாம் என்ற அச்சம் இந்த எதிர்ப்புக்கு அடிப்படையாக உள்ளது. இதற்கு ஒரு படி மேலே சென்று இத்தரவுகளை பயன்படுத்தி ஒருவரை கடத்திச்சென்று அவரின் கிட்னியை பிடுங்கி விடுவார்கள் என்று ஒரு யூடியூப்பர் ஒரு காணொளி விட்டுள்ளார்.
பெரிய அளவிலான டிஜிட்டல் அடையாள அமைப்புகளை செயல்படுத்தும் போது, பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், தரவுகளை பாதுகாக்க உறுதியாகும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவையுள்ளதை இந்த விவகாரம் சுட்டிக்காட்டுகிறது.
தனியுரிமை குறித்த கவலைகள் மற்றும் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுத்தக்கூடும் என்ற அச்சங்கள் காரணமாக தனிநபர் தகவல்களை டிஜிட்டல் வடிவத்தில் மாற்றும் முயற்சிகள் பொதுமக்களிடையே எதிர்ப்புக்களை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியா 2010 ஆம் ஆண்டு இலத்திரனியல் மருத்துவ பதிவுகள் (eMR) முறையை அறிமுகப்படுத்தியபோது, பொதுமக்களிடமிருந்து மிகுந்த எதிர்ப்பை சந்தித்தது. அந்த எதிர்ப்பு மிகுந்ததால், அதிகாரிகள் அங்கு சுய விருப்பத்துக்கேற்ப இந்த முறையில் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினர். அதேபோல, இந்தியா 140 கோடி மக்களுக்காக ஆதார் அட்டை திட்டத்தை ஒரு தசாப்தத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தியபோது, தனியுரிமை தொடர்பான அச்சங்கள் காரணமாக மக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பை சந்தித்ததாயினும் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக இதை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
எனது அடுத்த பாகத்தில் இதன் சாதக பாதகங்களையும், எடுக்கப்படவேண்டிய முன்னாயத்தங்களையும் பற்றி எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
உங்கள் பின்னூட்டங்கள் எனது அடுத்த பதிவுக்கு வலுச்சேர்க்கும்.

![]()