9 நாட்களுக்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 7-ம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது

அத்துடன் தண்ணீர் பற்றாக்குறையால் ஹெலிகாப்டர்கள் வாயிலாக கடல் நீரில் தண்ணீர் இறைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன .

ஒன்பது நாட்களுக்கும் மேலாக தீ எரிவதால் இதுவரை மொத்தம் 40,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்துள்ளதுடன் 12,000-க்கும் அதிகமான கட்டமைப்புகள் தீயால் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் காட்டுத் தீயால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்நிலையில், காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது. இதனால் தீயை அணைக்கப் போராடி வரும் தீயணைப்பு வீரர்களின் பணிகளில் முன்னேற்றத்தை கொடுத்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *