பட்டப்படிப்பு வேண்டாம், வேலைக்கு வாங்க

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தமது நிறுவனத்தில் பணிபுரிய பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளார்.

உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk), சமீபத்தில் வெளியான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

41,620 கோடி டொலர்கள் மதிப்புடன் முதலிடத்தில் உள்ள மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

Elon Musk announces job requirement

இந்த நிலையில் மஸ்க் வேலை தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் ஒரு தீவிர மென்பொருள் பொறியாளராக இருந்து, எல்லாவற்றுக்கும் செயலியை உருவாக்க விரும்பினால், உங்கள் சிறந்த படைப்புகளை code@x.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி எங்களுடன் சேருங்கள்.

நீங்கள் எங்கு படித்தீர்கள், எந்தப் பாடசாலையில் படித்தீர்கள் அல்லது பாடசாலைக்கு சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை மட்டும் காட்டுங்கள்” என தெரிவித்துள்ளார்.    

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *