கவிதைகள்
“உணர்வு சொல்லாமல் மறைந்து” … கவிதை … பொலிகை ஜெயா.

நிலத்திலூன்றிய விதைகள் முளைக்கவில்லை
என்னிதயமும் காய்ந்து கிடக்கின்றது…
மழையைத்தருவது போன்று கீழிறங்கி
போக்குக்காட்டி` முகில்கள் கலைகின்றன…
உன்னாத்மாவின் அழகு
இன்னும் என் மனதுள்…
என்னுள் எழுந்த எண்ணங்கள்
ஏதிலியாய் காற்றில் கரைந்தன…
நதியில் மீன்கள் நீந்தும்போது!
நதிக்கொரு வலியுமில்லை
என் மனவலிக்கு மருந்து- அன்பே..!
காய்ந்த இலை சருகாக காற்றுடன்
அள்ளுண்டு எங்கோ மறைந்தது…
எண்ணுணர்வும் உரக்கச்சொல்லாது
என் மனதுள் மறைந்து கொண்டது…
இப்பிரபஞ்சம் தெளிவாக நகர்கிறது
இன்னிசையிசைத்து வரும் காற்றின்
இனிய கீதங்கள் காதில் விழுந்தும்`
என்மனசு அதை இரசிக்கவில்லை.
சுவிஸிலிருந்து,

பொலிகை ஜெயா.
![]()