தற்போதைய அரிசித் தட்டுப்பாட்டுக்கு ரணிலின் இலவச அரிசி காரணமா?

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்காக ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இலவச அரிசி வழங்கப்பட்டமையே தற்போதைய அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறுவதில் உண்மையில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்காக இலவச அரிசி வழங்கப்பட்டமையே தற்போதைய அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறுவது உண்மையில்லை.

2021, 2022இல் அரச உர மானியம் இன்றியும், தேவையான இரசாயன பொருட்கள் இன்றியும் விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடினர். அந்த நிலைமையை மாற்றுவதற்காக 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கினார்.

நாட்டை வங்குரோத்து நிலைமையில் இருந்து மீட்க ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்ததுடன், விவசாயிகளை பலப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகயும் முன்னெடுத்தார். அதன்மூலம் 2024ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு இலவச அரிசியை விநியோகிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

இதற்காக கடந்த அரசாங்கத்தினால் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இதன்படி 2.85 மில்லியன் மக்களுக்கு இலவச அரிசி விநியேகிக்கப்பட்டது. அப்போது மக்களுக்கு அரிசியை போதுமான அளவு விநியோகித்தோம். இப்போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட இது காரணமல்ல. இந்த அரசாங்கத்தின் முடியாமையே இதற்கு காரணமாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *