முச்சந்தி

வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா உள்ளிட்டோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த கலந்துரையாடல் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாமலிருக்கும் தமிழர்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பான ஆர்வத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button