டிரம்ப் பனாமா கால்வாiயும் கீறின்லாந்தையும் கைப்பற்றப்போவதாக மீண்டும் தெரிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாiயும் கீறின்லாந்தையும் கைப்பற்றப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் சிலவாரங்களிற்கு முன்னர் இதேகருத்தினை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து இந்த விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமானதாக மாறியுள்ள நிலையில் ஜனாதிபதி மீண்டும் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார பலத்தை பயன்படுத்தி பனாமா கால்வாயையும் கிறீன்லாந்தையும் கைப்பற்றுவாரா அல்லது படைபலத்தை பயன்படுத்துவாரா என்ற கேள்விக்கு இல்லை இந்த இரண்டில் ஒன்றைதான் பயன்படுத்துவேன் என என்னால் உறுதியளிக்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பிற்கு பனாமா கால்வாயும் கிறீன்லாந்தும் முக்கியமானவை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடாவை கைப்பற்ற முயல்வாரா என்ற கேள்விக்கு பொருளாதார பலத்தை பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள டிரம்ப் இருநாடுகளிற்கும்இடையிலான பகிரப்பட்ட எல்லையை செயற்கையானது என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவை பாதுகாப்பதற்கு அமெரிக்கா பில்லியன் டொலர்களை சேமிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் கனடாவிலிருந்து கார்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதை கண்டித்துள்ளதுடன் கனடா அமெரிக்காவின் ஒரு மாநிலமாக விளங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *