முச்சந்தி

இந்த வருடத்தில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக இருக்கும்

இந்த வருடத்தில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்பு முனைகளாக இருக்கும் என்று பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் புத்தாண்டு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கத்தை அமைத்த ஆரம்பித்த வேகத்தை 2025ஆம் ஆண்டில் பல மடங்கால் அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம். முக்கிய தீர்மானங்களும் இந்த வருடத்தில் எடுக்கப்படவுள்ளன. பெரிய நடவடிக்கைகளும் இந்த வருடத்திலேயே எடுக்கப்படவுள்ளது. இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக இந்த வருடம் அமையவுள்ளது. இதில் ஆரம்பமாகவே கிளீன் ஶ்ரீலங்கா என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிலருக்கு இந்த வேலைத்திட்டம் என்னவென்று புரியாது இருக்கலாம். ஆனால் எமது மற்றைய வேலைத்திட்டங்களுக்கு உற்சாகமூட்டும் வேலைத்திட்டமாக இது இருக்கும். மாற்றங்கள் பல இதனூடாக நடக்கும். மக்கள் எதிர்பார்த்தவையும் இனி நடக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button