முச்சந்தி

தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு

தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 15ஆவது சிரார்த்த தினம், அட்டனில் மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மலையக மக்கள் முன்னணி தனித்துவமான கட்சியாகும். அக்கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என மக்கள் தரப்பினரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய விசேட குழு ஒன்றை அமைத்திருந்தோம்.

அந்த குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைக்களுக்கமைய எதிர்வரும் பொங்கலுக்கு பின்னர் மறுசீரமைப்பு பணி இடம்பெறும்.

அத்துடன், உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். அத்தேர்தலை மலையக மக்கள் முன்னணி தனித்து எதிர்கொள்ள வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் சிலர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கைகள் குறித்தும் பரிசீலித்து வருகின்றோம். நாடாளுமன்ற தேர்தலில் சில மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டது.நுவரெலியா மாவட்டததில் சிந்தித்து வாக்களித்திருந்தால் இன்னும் இரு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கலாம். எனவே, உள்ளுராட்சி சபை தேர்தலை உரிய வகையில் தமிழ் மக்கள் கையாள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button