பாதுகாப்பை குறைத்து வீட்டுக் காவலில் வைத்து தீவிர அரசியலில் இருந்து மகிந்தவை நீக்க முயற்சி!
விடுதலை புலிகள் அமைப்பு தற்போதும் இயங்கி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைத்து அவரை வீட்டுக் காவலில் வைத்து தீவிர அரசியலில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், புலிகளுக்கு உதவிய தலைவர்களை விடவும் அதனை அழித்த தலைவருக்கே அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டைக் காப்பாற்றிய தலைவர் ஆபத்தில் இருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதனால்தான் அவரைப் பாதுகாக்கிறோம். பாதுகாப்பு நபருக்கு நபர் மாறுபடும். விடுதலைப் புலிகள் அமைப்பு இன்றும் இயங்கி வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி நினைவேந்தலில் முன்னெடுக்கப்பட்ட 10 பாரிய கொண்டாட்டங்கள் தொடர்பில் இந்நாட்டின் பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் விடுதலை புலிகள் அமைப்பின் இருண்ட நிழல்கள் இன்னும் இந்த மண்ணிலிருந்து மறையவில்லை.
எனவே, இந்த அச்சுறுத்தல் விடுதலைப் புலிகளுக்கு உதவிய தலைவர்களுக்கு அல்ல அதை அழித்த தலைவருக்கே இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒரு கட்சி என்ற வகையில் நாங்கள் மிகவும் விரும்பத்தகாத அனுபவங்களை எதிர்கொண்ட வருடமாக இது அமைந்துள்ளது. இந்த ஆண்டை விட, 2022 எங்களுக்கு மிகவும் விரும்பத்தகாத ஆண்டாகும்.
ஆனால் 2024ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் நாட்டு மக்கள் அதிகம் ஏமாற்றப்பட்ட ஆண்டாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. மக்களை ஏமாற்றி பொய் சொல்லி பெற்ற அதிகாரம் இது. இந்த அதிகாரத்தை காக்க யாரும் வர முடியாது எனவும் தெரிவித்தார்.
இயற்கையின் விதி உள்ளது. இயற்கையின் சட்டம் பொய்களை ஆட்சி செய்ய அனுமதிக்காது. நல்லாட்சி அரசாங்கத்திலும் இவ்வாறு நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு முன்னரை போன்றே இந்த அரசாங்கத்திற்கு இந்த விடயம் நடக்கும் என்பதை இப்போது காணமுடிகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
![]()