அரசின் செயற்பாடுகளை பொறுமையாக அவதானிக்கிறோம்
அரசாங்கத்தின் செயற்பாடுகளை பொறுமையாக தாம் அவதானித்து வருவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,
அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. புதுவருடமும் பிறக்கின்றது. தமக்கு காலம் வேண்டும் என்றே அரசாங்கம் கூறி வந்தது. காலமும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி புத்தாண்டில் என்ன செய்யப் போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. மக்களும் அரசாங்கம் எப்படி நடந்துகொள்கின்றது என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நாங்களும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்து வருகின்றோம் என்றார்.
![]()