2025 புத்தாண்டை வான வேடிக்கைகளோடு வரவேற்ற அவுஸ்திரேலியா, நியூசிலாந்து!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
பசிபிக் நாடான கிரிபாட்டி 2025 புதிய ஆண்டை முதன்முதலாக வரவேற்றது.
அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது.
அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு பிறந்துவிட்டதை உலகின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.
அவுஸ்திரேலிய நகரத்தின் புகழ்பெற்ற வானவேடிக்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னியில் கூடினர்.

அவுஸ்திரேலியாவில் 2025 புத்தாண்டு கொண்டாட்டம், இரவை பகலாக்கிய வான வேடிக்கை நிகழ்ச்சிகள்
சிட்னி நகரில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
சிட்னியின் வானவேடிக்கை அதன் துறைமுகப் பாலம், ஓபரா ஹவுஸ் மற்றும் அதன் புகழ்பெற்ற துறைமுகத்தில் நடைபெற்றது.
2025 புத்தாண்டு கொண்டாட்டமானது இரவை பகலாக்கிய வான வேடிக்கையாக நிகழ்ச்சிகள் பல சிட்னி கடற்கரையிலும் நிகழ்ந்தன.
உலகம் முழுவதும் 2025 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் தற்போது புத்தாண்டு பிறந்துள்ளது. இங்குள்ள சிட்னி நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இதைக் கண்டு ரசிப்பதற்காகவே உலகம் முழுவதும் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர். அந்த வகையில் இன்று சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

அங்கு 2025 ம் ஆண்டை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண வான வேடிக்கைகளுடன் இரவை பகலாக்கும் வகையில் வானத்தில் ஒளி வெள்ளம் பரவியது. இதில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனைக் கண்டு ரசித்த மக்கள், தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு 2025ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
![]()