முச்சந்தி

மக்களை அச்சப்படுத்தி அரசை அகற்ற முயற்சி

மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இந்த அரசாங்கத்தை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதலாவது அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமையும் என்பது உறுதி எனவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் நாளுக்கு நாள் மக்களுக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் இந்த அரசாங்கத்தின் போக்கில் ஒருவித சந்தேகத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆறு மாத காலத்துக்கு நீடிக்கும். அடுத்த பொறியில் விழும் என்று பகல் கனவு கண்டு, இப்படியெல்லாம் கதைத்து மக்களை ஏமாளிகளாக்க எதிர்க்கட்சிகள் நினைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டி எழுப்பி இந்த நாட்டில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தேசிய மக்கள் படையின் ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை தேசிய மக்கள் சக்தியாகிய நாம் இந்நாட்டு மக்களுக்கு கூறுவதாகவும் அதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, நான் குறிப்பாக மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், நாம் அனைவரும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் செலவிடுவோம், இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதல் அரசாங்கமாக மாறும், அது நிச்சயம் மற்றும் உத்தரவாதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.aaaaa

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button