முச்சந்தி

கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுடன் போராட வேண்டியுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

‘ஷில்பாபிமானி’ ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில்  சனிக்கிழமை கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

”தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் மக்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டியிருந்தது. மேலும் கடந்த அரசாங்கத்தின் தவறான செயல்களை விமர்சித்தோம்.

மக்களுக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் அரசுகளின் கொள்கைகளின்படி, அவர்களுக்கு நிவாரணம் வழங்காமல், அவர்களின் உரிமைகளை மீறுவதில் தற்போது, ​​பழைய நடைமுறைகளை அகற்றுவதில் அரசாங்க அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கங்களின் போது தாங்கள் கடைப்பிடித்த கொள்கைகளுக்கு எதிராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர்.

இந்த நிலைமையை அதிகாரிகளை நம்ப வைப்பதும் கடினமாக இருக்கின்றது. அதிகாரிகள் இன்னும் தங்கள் பழைய தீர்மானங்கள், உடன்படிக்கைகள், அமைச்சரவை முடிவுகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகளில் உறுதியாக இருக்கின்றனர்.

அதிகாரிகள் இன்னும் எங்களுடன் வாதிடுகிறார்கள், இன்று நாம் நிதியமைச்சகம், வரிக் கொள்கை போன்றவற்றுடன் போராட வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button