சவேந்திர சில்வாவின் பதவிக் காலம் நீடிக்கப்படாது
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா அல்லது தக்கவைப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சேவைக் காலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடித்திருந்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சவேந்திர சில்வாவின் நீண்ட பாதுகாப்பு சேவை வரலாறு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்து அவர் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அவருடைய பதவி காலத்தை நீடிப்பதற்கான எந்த யோசனையையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா அல்லது தக்கவைப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
இதேவேளை அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அதனை தொடர்வது அல்லது இல்லாதொழிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
![]()