சாவகச்சேரியில் பட்டப் பகலில் வீடு புகுந்து 8 பவுண் நகைகள், பணம் துணிகரத் திருட்டு
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி-ஆசிரியர் வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் திங்கட்கிழமை பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த 8 பவுண் நகைகள்,200 கனேடியன் டொலர் மற்றும் 35 ஆயிரம் ரூபா (இலங்கைப் பணம்) ஆகியன திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
திங்கட்கிழமை பகல் வேளையில் அரச உத்தியோகத்தரான மகன் கடமைக்குச் சென்றிருந்த நிலையில் வயோதிபத் தாயார் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளார்.
இதனைச் சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் வயோதிப தாய் குளியலறைக்குச் சென்றதும் திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த அலுமாரி, கைப்பை ஆகியவற்றில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()