முச்சந்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி; 17 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் வடக்கு கடற்பகுதியில்  இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட படகுகளுடன் கைதான இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பகுதிக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உட்பட, 2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் 72 இந்திய மீன்பிடி படகுகளையும், 554 இந்திய மீனவர்களையும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button