உயிரியல் ஆயுத விவகாரம்: பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா!

சீனா, பிரித்தானியாவில் உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் சீன மருத்துவத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் தரவுகளை கண்காணிக்க சீன உபகரணங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக பிரித்தானியாவில் செயற்பட்டு வந்த ஒரு சீன நிறுவனம் திடீரென்று ஐரோப்பாவிலும் பிரித்தானியாவிலும் கிளைகளை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தும் நிலைக்கு வளர்ந்துள்ளது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஆண்டுக்கு 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் திரட்டும் குறித்த நிறுவனம் தற்போது 50 National Health Service (NHS) மருத்துவமனை உட்பட ஐரோப்பா முழுவதும் 600 கல்வி சார்ந்த மருத்துவமனைகளில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்காணிப்பு, மயக்க மருந்து மற்றும் அல்ட்ராசவுண்ட் கருவிகள் உள்ளிட்ட முக்கியமான உபகரணங்களை விநியோகித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் NHS மற்றும் ஐரோப்பிய சுகாதாரத்துறையில் சீன தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், சீனா பிரித்தானியாவில் உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயிரியல் நிபுணர்களும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், NHS முழுவதும் கடுமையான பாதுகாப்பு அமைப்புகள் காணப்படுவதாகவும், இதனால் சீனாவால் தமது தரவுகளை தவறாகப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *