யாழ்.குடாவை உலுக்கிய எலிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்

கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக் காச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தற்பொழுது, காச்சல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் இந்த எலிக் காச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் இறுதியில் யாழில் பெய்த கடும் மழை காரணமாக டிசம்பர் மாத முற்பகுதியில் எலிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டத்தில் , 08 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்றுள்ளதோடு ,டெங்கு தொற்று அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கது.
![]()