பாராளுமன்றமா? பல்கலைக்கழகமா?

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் ஆளும்கட்சி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

அதன்படி சட்டத்தரணி பதவியை பயன்படுத்தியதாக அஜித் பி. பெரேரா, சமிந்திரனி கிரியெல்ல ஆகியோர் மீதும் காவிந்த ஜயவர்தன வைத்தியர் என தன்னை அடையாளாப்படுத்துவதாகவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இது தவிர நாமல் ராஜபக்ச சட்டப் பரீட்சை எழுதிய விதம் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் இருந்து பாரிய தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஆனால் தான் இந்தியாவில் உரிய தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும், இலங்கையில் மருத்துவம் படித்ததாக எங்கும் கூறவில்லை என்றும் பதில் வழங்கியுள்ள காவிந்த ஜெயவர்தன, அவை தொடர்பான அடையாள அட்டைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்ததும், சமிந்திரனி கிரியெல்ல தனது அனைத்து பட்டப்படிப்பு சான்றிதழ்களையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, லண்டனில் பாரிஸ்டர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதாகவும், பாரிஸ்டர் வழக்கறிஞர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் லண்டனில் சட்டத்தரணி தொழில் செய்து வருவதாகவும், இன்றும் அதையே செய்ய முடியும் என்றும், அதனால் சட்டத்தரணி என்ற பெயரைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் கடும் சர்ச்சைகள் சமீப நாட்களில் மேலெழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *