சிந்திக்க வைக்கும் ஒரு படம்… ஜீவன்

நாட்டின் ஒரு ஜனாதிபதி , தனது தாயை ஏதோ ஒரு தனியார் வைத்தியசாலையில் அல்லது வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைத்தியம் செய்யக்கூடிய நிலையில், பொதுமக்கள் சிகிச்சை பெறும் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்திருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
அதைவிட வைத்தியசாலைக்கே அறிவிக்காமல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது தாயைப் பார்க்க வைத்தியசாலைக்கு திடீரென சென்றுள்ளார். இதை வைத்தியசாலை வட்டாரங்களையே வியந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்று அரசு வைத்தியசாலைகள் மேல் நம்பிக்கை இல்லா தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், மக்களிடையே நம்பிக்கை ஏற்பட இந்த நிகழ்வு ஒரு முன்மாதிரியாக இருப்பதாகவும், அதே நேரத்தில் ஏனைய அரசியல்வாதிகள் போல் அல்லாது மக்கள் பெற்றுக் கொள்ளும் அதே வைத்திய சிகிச்சையை, தாமும் பெற்றுக் கொள்வதாக தெரிவது பொது மக்களிடையே பேசு பொருளாக உள்ளது.
அத்தோடு தனது தாயின் முன் அனுரகுமார திசாநாயக்க, அமர்ந்து அவரது நலனை விசாரிக்கும் காட்சி சாதாரணமான ஒரு நிகழ்வாக தெரிவது பாமர மக்களை நெகிழ்ச்சிப்படுத்தி உள்ளது. அவரது தாயை சந்தித்தபின் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள் மற்றும் பணிபுரியும் அத்தனை பேருடனும் நலம் விசாரித்து விட்டு, திரும்பி உள்ளார். இந்த புகைப்படம் வெளியாகும் வரை ஊடகங்கள் கூட இதை அறிந்திருக்கவில்லை என்பது ஒரு வியப்பான விடயமாக பேசப்படுகிறது.
![]()