ரஷ்யா மீது யுக்ரைன் தாக்குதல் – 6 பேர் பலி

ரஷ்யாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள நகரத்தின் மீது யுக்ரைன் நடத்திய தாக்குதலில் குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

யுக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் யுக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய இராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களை யுக்ரைன் இராணுவம் எதிர்கொண்டு போரிட்டு வருகின்றது.

இந்த நிலையில், ரஷ்யாவின் ரில்ஸ்க் நகரில் நேற்று உக்ரைன் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர் என்று குர்ஷ்க் மாகாணத்தின் பொறுப்பான ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *