சைப்ரஸிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை மீட்க இராஜதந்திர நடவடிக்கை!

சைப்ரஸில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சமூகப் பாதுகாப்பு நிதியை விடுவிக்க இராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி அறிவித்துள்ளார்.

சைப்ரஸில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து சமூக பாதுகாப்பு நிதியாக பெறப்படும் பணம் அவர்களுக்கு மீள வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி உரிய பணத்தை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button