முச்சந்தி

சாவகச்சேரி நகர சபை முன்றலில் போராட்டம்

யாழ். சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகர சபை முன்றலில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளைக்  குத்தகைக்கு வழங்குவதற்காகப் பகிரங்கமாகக் கேள்வி கோரப்பட்டுள்ளது.

கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்குப் புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளமைக்கு  எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையை உள்ளடக்க வேண்டும் என்றும் கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் நகர சபையின் பிரதான நுழைவாயிலைப்  பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களைக் கலைக்க முற்பட்டனர்.

இதனால் நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தத் தருணத்தில் நகர சபை  வாகனங்களுக்குப் பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவு இயந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு  உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button