மனோ கணேசன் உட்பட 5 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்றம் இன்று (17)  புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் இடம்பெறவிருப்பதுடன் இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின் தெரிவு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய இவ்வாறு நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (16) இடம்பெற்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

டிசம்பர் 17 ஆம் திகதி (இன்று) மற்றும் 18ஆம் திகதியில் (நாளை) முன்னர் தீர்மானிக்கப்பட்ட நாடாளுமன்ற அலுவல்களில் சில திருத்தங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியால் (SJB) பெயரிடப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வரும், புதிய ஜனநாயக முன்னணியால் (NDF) பெயரிடப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தெரிவுக்காகவும், அதன் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *