தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு அநுரவை நம்பும் மோடி

நாட்டினதும் அரசசாங்கத்தினதும் தலைவராக பதவியேற்ற பின் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைநகர் புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது திசாநாயக்க, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாட்டின் நிலப்பரப்பை பயன்படுத்த மாட்டோம் என உறுதியளித்ததாகவும் அத்துடன் மீனவர் பிரச்சினைக்கு’ நிலையானதும் நீடித்ததுமான தீர்வு ” காணவேண்டுமென தெரிவித்துள்ள அதேவேளை இலங்கையில் “நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு” குறித்து கலந்துரையாடியுள்ள பிரதமர் மோடி, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நம்பிக்கையை வெளியிட்டார்.

இரு தலைவர்களும் ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டனர் , இந்த சந்திப்பின்போது , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஏற்பட்டிருந்த “முன்னொருபோதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் போது” உதவியதற்காக ஜனாதிபதி திஸாநாயக்க இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

சுமார் 4 பில்லியன் டொ லர் மதிப்புள்ள கடன் மற்றும் மானியங்களைவழங்கி இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்ததாக பிரதமர் மோடிகுறிப்பிட்டார் .

அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை டில்லியை சென்றடைந்த ஜனாதிபதி திஸாநாயக்க, இன்று செவ்வாய் வரை இந்தியாவில் தங்கி யி ருப்பார் . பயணத்தை இருக்கிறார். இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி திஸாநாயக்கவின் முதல் விஜயம் இந்தியாவின் ‘அண்டை நாடு முதலி ல் ‘என்ற ‘கொள்கையை கொண்டாடுகிறது.அதேவேளைஇந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் அநுரகுமாரதிஸா நாயக்க சந்தித்திருக்கிறார் இத்துடன் டி ல்லியில் வர்த்தக நிகழ்வொன்றிலும் அவர் பங்கேற்கிறார், அதன்பிறகு புத்த கயாவுக்குச் செல்கிறார்

மேலும்ஜனாதிபதி திஸாநாயக்காவின் இந்த விஜயத்தின்போது இருதரப்பும் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன

ஜனாதிபதியின் இந்த விஜயம் இருதரப்பு உறவுகளில் புதிய வேகத்தையும் சக்தியையும் செலுத்தியுள்ளது என்றும், “முதலீடு சார்ந்த அபிவிருத்தி ” மற்றும் பவுதிக , டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய “எதிர்கால பார்வையில்”தாங்கள் செயற் படுவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார் .

சம்பூர் சூரிய சக்தி திட்டம், இலங்கைக்குள் ரயில் இணைப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான படகு மற்றும் விமான சேவைகள், டிஜிட்டல் அடையாள திட்டம்,கல்வி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஹைட்ரோகிராபி[பூமியின் மேற்பரப்பு மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் செல்லக்கூடிய பகுதியின் பவுதிக அம்சங்களை அளவிடும் மற்றும் விவரிக்கும் விஞ்ஞான ம்] பணிகள் குறித்தும்இருதரப்பினரும் கலந்துரையாடியுள்னர் .அதேவேளை ஜனாதிபதி திஸாநாயக்க மீனவர்களின் பிரச்சினைக்கு “நீடித்த”தும் “நிலையானதுமான தீர்வை” கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் .

மேலும் இச்சந்திப்பின்போது கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு பொறிமுறையின் மூலம்கலந்துரையாடப்படும் விட யங்களில் கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மோடி முன்னிலைப்படுத்தியிருந்தார் அத்துடன் இருநாட்டு மக்களும் பரஸ்பரம்இரு நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு இ ராமாயண சுற்றுலா மற்றும்பவுத்தயாத்திரை பற்றி கலந்துரையாடியுள்ளனர் .

“ஜனாதிபதி திசாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்” என்றுஇந்தியவெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர்கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *