முச்சந்தி

எலிக் காய்ச்சலினால் யாழில் இதுவரை 85 பேர் பாதிப்பு

எலிக் காய்ச்சல் காரணமாக யாழ். மாவட்டத்தில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது பருத்தித்தறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை மதியத்துடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் வவுனியா மாவட்ட சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் ஏற்பட்டுள்ள எலி காய்ச்சல் காரணமாக ஏழு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மேலும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டிருந்தது. தற்போது வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் அறிகுறி உடன் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button