வடமராட்சியில் வானத்தில் பறந்த துவிச்சக்கர வண்டி

வானத்தில் பறந்த துவிச்சக்கர வண்டி ஒன்று நிலத்தில் விழுந்து பலத்த சேதமடைந்த சம்பவம் உடுப்பிட்டி, கம்பர்மலைப் பகுதியில்  இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது;

மேற்படி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பட்டம் ஏற்றியுள்ளனர். அப்பட்டத்தின் வால் பகுதியில் சிக்கிக்கொண்ட துவிச்சக்கர வண்டி ஒன்று,பட்டத்துடன் சேர்ந்து வானத்தில் பறந்த நிலையில் அதனை பெருமளவான மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுள்ளனர்.

எனினும் வாலின் சிக்கல் எடுபட்டதால் துவிச்சக்கரவண்டி திடீரென வானத்திலிருந்து நிலத்தில் விழுந்துள்ளது. இதனால் துவிச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *