அநுரவின் இந்திய விஜயத்தை சீர்குலைக்க ரணில் முயற்சியா?
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்துக்கு முன்பாக ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றதன் பின்னணியில் அனுரகுமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்தை சீர்குலைக்கும் வகையில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள அதே நேரம் ரணில் விக்ரமசிங்க மீண்டும் எதிர் வரும் 22 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளமையால், அவர் கோபமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை தொடர்வாரா, இந்தியாவுடன் என்ன ஒப்பந்தங்கள் செய்யப்படும், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை வைத்திருக்கும் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் திட்டங்கள் தொடருமா போன்ற பல்வேறு விடயங்கள் காணப்பட்டன.
ஆனால், அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அதானியின் அமெரிக்க முதலீடுகள் குறித்து தீவிரமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் அதானியின் திட்டங்கள் தொடர்பாக சிக்கல் எழுந்தபோது, அதானி உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வங்கியிடம் பணம் கேட்டு சமர்ப்பித்த முன்மொழிவை திரும்பப் பெறுவதாகவும், அதற்கு திறன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன் மூலம் அதானி அமெரிக்க முடிவின் முகத்தில் வீழ்ந்து விடவில்லை என்றும் அது தொடர்பான திட்டங்களைத் தொடரலாம் என்ற குறிப்பைக் கொடுத்தது. இதனால் அதானி விவகாரத்தை இந்திய பேச்சுவார்த்தை மேசையில் விவாதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதானியின் அறிக்கை வெளியாவதற்கு முன்னரே, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்திருந்தது.
ஆனால் இந்த இந்திய விஜயத்தின் போது கலந்துரையாடலில் உள்ள திட்டங்களை மீள் ஆய்வு செய்வதற்கும் இணக்கம் காணப்படுவதற்கும் கால அவகாசம் கோர ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை தனது மனைவி திருமதி மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருடன் எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லும் ரணில் விக்ரமசிங்க, கிறிஸ்மஸ் காலத்தையும் புத்தாண்டு காலத்தையும் இந்தியாவில் கழிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
![]()